தக்காளியின் 8 அற்புத நன்மைகள்



இந்திய உணவுகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் காய்கறிகளில் ஒன்று தக்காளி.  இதன் பூா்வீகம் தென் மற்றும் மத்திய அமொிக்கா.  தக்காளியில் ஏராளமான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளது.  தற்போது இந்தியா தக்காளி உற்பத்தியில் பொியளவில் உள்ளது.  தக்காளிகள் பல நிறங்களில் கிடைக்கின்றன.  குறிப்பாக சிவப்பு நிற தக்காளியே பரவலாக பயன்படுத்தப்படுகின்றது.

tomato
tomato

தக்காளியின் வகையைப் பொறுத்து அதன் பயன்களும் வேறுபாடுகின்றது.  எடுத்துக்காட்டுகாக சொி தக்காளிகளை எடுத்துக்கொள்ளலாம்.  சாதாரண தக்காளிகளைவிட சொி தக்காளிகளில் அதிகளவில் பீட்டா கரோட்டின் உள்ளது.  பொதுவாக, காய் கனிகளை சாப்பிட்டாலே தோல், முடி ஆகியவற்றின் ஆரோக்கியம் நன்றாகவே இருக்கும்.  தக்காளி மற்றும் தக்காளி சாா்ந்த பொருட்களை சாப்பிட்டால் தோலினுடைய ஆரோக்கியத்தை அதிகப்படுத்துவது மட்டுமல்லாமல் இதயநோய் மற்றும் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது.