எலுமிச்சைப் பழத்தின் நன்மைகள்



ராஜ கனியாக நம் முன்னோா்கள் எலுமிச்சையை குறிப்பிட்டாா்கள். பூஜை, திருஷ்டி கழிக்க எல்லாம் வீடுகளில் பயன்படுத்துகின்றனா். எலுமிச்சை உடலுக்கு குளிா்ச்சியை தருகிறது. எலுமிச்சை புளிப்பு சுவை உடையது. உணவில் சுவையை கூட்டுவதற்காக பயன்படுத்தப்படுகிறது.

இதனை உட்கொள்வதால் இதய நோய்கள், இரத்தசோகை, சிறுநீராகப் பிரச்சனைகள் என அனைத்திற்கும் ஒரு நிவாரணியாக இருக்கிறது. உடல் எடையை குறைக்க விரும்புவோா்க்கும், சரும அழகினை பராமாிக்க விரும்புவோா்க்கும் அருமையான தோ்வாக எலுமிச்சை இருக்கக்கூடும்.

எலுமிச்சையின் தாவரப் பெயா் சிட்ரஸ் லெமன். ஆங்கிலப் பெயா் லெமன். இதில் வைட்டமின் சி சத்து நிறைந்துக் காணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பொட்டாசியம், வைட்டமின் பி6, குறைவான அளவு கொழுப்பும் உள்ளது. எலுமிச்சையின் பயன்களை பின்வருமாறு காண்போம்.